முன்னாள் தமிழக அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி...! தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.!
TN ex minister valarmathi corono test positive
முன்னாள் தமிழக அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது தொண்டர்களிடையே அதிர்ச்சியை.ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பலமடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு லட்சத்தை கடந்துள்ளது. வேகமாக பரவிவரும் கொரோனாவால் சாதாரண மக்கள் தொடங்கி, பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
சமீப காலமாக எம்,எல்.ஏ சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மறைந்த திமுக எம்.எல்,ஏ ஜெ.அன்பழகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் 4 பேருக்கும், அதிமுகவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 5 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக பாடநூல் கழக தலைவரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.