பல்கலை., செயல்பாடுகளில் திருப்தியில்லை - ஆளுநர் மாளிகை பரபரப்பு அறிக்கை.!
பல்கலை., செயல்பாடுகளில் திருப்தியில்லை - ஆளுநர் மாளிகை பரபரப்பு அறிக்கை.!
தமிழ்நாடு ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் ரவி தலைமையில் கவர்னர் மாளிகையில் வைத்து அனைத்து பல்கலைக்கழக பிரதிநிதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.
பல்கலைக்கழகத்தில் வெளிப்படை தன்மையுடன் நிர்வாக கூட்டங்கள் நடத்தப்படுவது இல்லை. பல்கலைக்கழக ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நேர்மையான முறையில் நிரப்பப்பட வேண்டும். பதிவாளர் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
இதனை விரைந்து நிரப்ப வேண்டும். துணைவேந்தர்கள் இல்லாத காரணமாக பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளும் முடங்கி கிடக்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.