23 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்தும் மதுபானக்கடைகள் மூடல்..!
23 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்தும் மதுபானக்கடைகள் மூடல்..!
தமிழக அரசு ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கை அறிவித்துள்ளதால், அன்று மதுபான கடைகள் மூடப்பட்டு இருக்கும்.
இந்தியா 2 கொரோனா அலைகளின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரான் தொற்றை மூன்றாவது அலையாக எதிர்கொள்ள தொடங்கியுள்ளது. இதனால் அந்தந்த மாநில அரசுகள் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த ஜன. 14 முதல் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டன. அதனைப்போல, நடப்பு வாரத்தில் ஜன. 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முழு ஊரடங்கு சனிக்கிழமை இரவு ஊரடங்குடன் சேர்ந்து, 48 மணிநேர முழு ஊரடங்காக இருக்கும். சனிக்கிழமை இரவு 10 மணிமுதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த நேரங்களில் மக்கள் அத்தியாவசிய அல்லது அவசர தேவைகள் இன்றி வெளியே வர அனுமதி கிடையாது.
பால் விற்பனை மையம் (அரசின் அனுமதி பெற நேரம் மட்டும்) மற்றும் மருந்தகங்கள் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்படும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்படும். மேலும், அன்றைய நாளில் மதுபானக்கடையும் மூடி இருக்கும். இதனால் குடிமகன்கள் சனிக்கிழமையே மதுபானத்தை வாங்கி வைக்கவும் திட்டமிட்டு இருக்கின்றனர்.