மஞ்சள் நிறத்தில் மாறப்போகும் தமிழக அரசு பேருந்துகள்.! புதுப்பிக்கும் பணி தீவிரம்.!
மஞ்சள் நிறத்தில் மாறப்போகும் தமிழக அரசு பேருந்துகள்.! புதுப்பிக்கும் பணி தீவிரம்.!
இனி தமிழக அரசு பேருந்துகள் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட இருப்பது மட்டுமல்லாமல் பேருந்தின் உள்ளே பல்வேறு வசதிகள் புதுப்பிக்கப்பட இருக்கின்றன.
தற்போது தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தினால் இயக்கப்படுகின்ற மாநகர பேருந்துகளானது சிவப்பு மற்றும் நீல நிறங்களில் இயங்கி வருகின்றன. மாநிலம் முழுவதும் இருக்கின்ற 8 கோட்டங்களில் சேதமடைந்திருக்கும் பேருந்துகள் சீரமைக்கப்பட இருக்கின்றது.
அந்த வகையில் ஏற்கனவே இருக்கும் பழைய பெயிண்டுகள் நீக்கப்பட்டு புதிதாக மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறம் பூசப்பட இருக்கின்றது. இனி தமிழக அரசு பேருந்துகள் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட இருப்பது மட்டுமல்லாமல் பேருந்தின் உள்ளே இருக்கைகள் மற்றும் பல்வேறு வசதிகள் புதுப்பிக்கப்பட இருக்கின்றன.
இதற்கான இயக்கத்தினை வரும் ஆகஸ்ட் 11ம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவங்கி வைக்க உள்ளார். தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தின் புதிய பேருந்துகள் பெங்களூரு, சென்னை, கரூர் மற்றும் திருச்சியில் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.