ஜல்லிக்கட்டு! சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு!
Tn govt releases order to organize jallikattu
பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. தமிழக இளைஞர்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து நடத்திய மாபெரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை இந்த நாடு நிச்சயம் மறக்க வாய்ப்பில்லை.
இந்நிலையில் பொங்கல் வருவதை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. ஒவொரு வருடமும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் பீட்டா என்ற அமைப்பு ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கியதை அடுத்து கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது சட்டப்படி குற்றம் என்ற நிலை வந்தது. இதனை எதிர்த்து தமிழக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகளா ஜல்லிக்கட்டு விமர்சியாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஜல்லிக்கட்டு நடத்த பலவிதமாக நிபந்தனைகளையும் விதித்துள்ளது தமிழக அரசு.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் போன்ற ஜல்லிக்கட்டிற்கு பெயர்போன முக்கிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அதனிற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசு.