மாணவர்களே இன்றே கடைசி நாள்.. தப்பி தவறியும் மறந்துடாதீங்க., இல்லனா ஒரு வருடம் காத்திருக்கணும்.!
மாணவர்களே இன்றே கடைசி நாள்.. தப்பி தவறியும் மறந்துடாதீங்க., இல்லனா ஒரு வருடம் காத்திருக்கணும்.!
பன்னிரண்டாம் வகுப்பு பயின்று முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கு கடந்த மாதம் முதலாகவே விண்ணப்பித்து வருகிறார்கள். கலை அறிவியல் & பொறியியல் கல்லூரிகளில் இணையவழியில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாக தாமதம் ஏற்பட்ட நிலையில், சி.பி.எஸ்.இ வழியில் 12-ம் வகுப்பு பயின்று முடித்தவர்கள் நிலையை கருத்தில் கொண்டு உயர்கல்வி சேர்க்கை விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, 22 ஆம் தேதி முடிவடைவதாக இருந்த மாணவர்களின் விண்ணப்பம் 27 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர 2 இலட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 163 கலை அறிவியல் கல்லூரியில் சேர 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளனர்.