போதை இளைஞர்களை நல்வழிப்படுத்த முயற்சி; விற்பவரே நல்வழிப்படுத்தினால் சன்மானம் - அமைச்சர் அறிவிப்பு.!
போதை இளைஞர்களை நல்வழிப்படுத்த முயற்சி; விற்பவரே நல்வழிப்படுத்தினால் சன்மானம் - அமைச்சர் அறிவிப்பு.!
தமிழ்நாடு மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி, நேற்று கோயம்புத்தூரில் உள்ள பொள்ளாச்சியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் பேசுகையில், "மதுபான பழக்கத்தை கைவிடக்கூறி குடிப்பழக்கம் உடையோரிடம் பலவகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
மதுப்பழக்கத்திற்கு ஆளான இளைஞர்களை கண்டறிந்து, அவர்களை டாஸ்மாக் பணியாளர்கள் கவுன்சிலிங் மையத்திற்கு அனுப்பி வைத்தால், அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.
கவுன்சிலிங் மையத்திற்கு வரும் இளைஞருக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டு, அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என பேசினார்.