தமிழக காவல்துறை எச்சரிக்கை#: தடையை மீறி 5 பேருக்கு மேல் கூடினால் கடுமையான நடவடிக்கை!
tn police warned for not following 144
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அமலில் உள்ள 144 தடை உத்தரவை மீறி 5 பேருக்கு மேல் கூடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கு காரணம் மக்கள் சமூக விலகலை பின்பற்ற வேண்டுமென்று தான்.
ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு எளிதில் பரவக்கூடிய கொடிய கொரோனா வைரஸ்சிடம் இருந்து நம்மை காத்துக்கொள்ள தற்போது இருக்கும் ஒரே தீர்வு இது தான். எனவே தான் அரசு 144 தடையை கையில் எடுத்துள்ளது.
மே 3 வரை அமலில் இருந்த இந்த 144 தடை தற்போது மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்கிக்கொள்ள மிகுந்த பாதுகாப்புடன் மக்கள் வெளியில் வரலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் 144 தடை உத்தரவின்படி 5 பேருக்கு மேல் யாரும் ஒரு இடத்தில கூடகூடாது. எனவே இனிமேல் 144 தடை உத்தரவு நீங்கும் வரை 5 பேருக்கு மேல் யாரும் ஒரு இடத்தில் கூடினால் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.