தமிழக மக்களே தயாரா.?! இன்று முதல்.. பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்.!
தமிழக மக்களே தயாரா.?! இன்று முதல்.. பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்.!
பொங்கல் பரிசு தொகுப்பு
வரும் ஜனவரி 14-ஆம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, தமிழக மக்கள் அனைவரும் சிறப்பாக பொங்கல் வைத்து கொண்டாட தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகையை அவர்களுக்கு வழங்குகிறது.
இலங்கை தமிழர்களுக்கும் விநியோகம்
இதற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. மேலும், இந்த பொங்கல் பரிசு தொகுப்பு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகங்களில் வசிக்கக் கூடியவர்களுக்கும் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இலவச வேட்டி, சேலைகள் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: 2 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை.. களைகட்ட போகும் விற்பனை.!
இலவச வேட்டி, சேலைகள்
பொங்கல் பரிசு தொகுப்புடன் இதையும் சேர்த்து வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசு தொகை பெற இன்று முதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. தொகுப்பை எப்பொழுது பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றிய நாள், நேரம் உள்ளிட்டவை அடங்கிய இந்த டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்படும்.
டோக்கன்கள் எதற்காக?
டோக்கணில் குறிப்பிடப்பட்டுள்ள படி ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ரேஷன் கடைகளில் மக்கள் குவிந்து கூட்ட நெரிசல்களில் சிக்கி தவிப்பதை தடுக்க இது போன்ற ஒரு நடைமுறையை அரசு முன்னெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புத்தாண்டு கோலம் மீது வண்டி ஓட்டியவருக்கு அரிவாள் வெட்டு.. சென்னையில் பகீர்.!