நாளை இந்த 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்..! 11 எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் தகவல்.!
TN Rain update for next 24 hours
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழையும், 5 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், கிழக்கு மற்றும் மேற்குத்திசை காற்று சந்திக்கும் பகுதியானது தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கில் நிலவுவதால், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், நாமக்கல், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக சேலம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகக்கூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.