அப்படிப்போடு..! இனி சென்னை பேருந்து படிக்கட்டுகளில் தொங்கல் பயணத்துக்கு ஆப்பு - அதிரடி செயல்.!
அப்படிப்போடு..! இனி சென்னை பேருந்து படிக்கட்டுகளில் தொங்கல் பயணத்துக்கு ஆப்பு - அதிரடி செயல்.!
சென்னை மாநகராட்சி பகுதிகள் மற்றும் வெளிமாவட்ட பகுதிகளை இணைக்கும் வகையில், சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து சேவை பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்கிறது. சென்னை நகரில் பணியாறுவோர் மற்றும் மாநகரின் எல்லைப்பகுதிகளில் இருப்போர் தினம் தலைநகருக்கு வந்து செல்ல பேருந்து போக்குவரத்து பிரதானமாக உதவுகிறது.
ரூட் தல அட்ராசிட்டிஸ்
இவ்வாறான பேருந்துகளில் தினமும் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், ரூட் தல பெயரில் அட்டகாசம் செய்வது, பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிப்பது என செய்யும் சர்ச்சைகள் ஏராளம். இதனை கட்டுப்படுத்த மாநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பல நடவடிக்கை எடுத்தும் பலனில்லை.
இதையும் படிங்க: அலட்சியமாக தண்டவாளத்தை கடந்த ஐடி ஊழியர் இரயில் மோதி பலி; சென்னையில் சோகம்.!
படிக்கட்டு பயணத்திற்கு ஆப்பு
இந்நிலையில், சென்னையில் தானியங்கு கதவுகள் இல்லாத 468 பேருந்துகளில், 448 பேருந்துகளுக்கு தானியங்கு கதவுகள் பொறுத்தட்டு இருப்பதாக போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு விசயத்திற்கு மட்டுமே போக்குவரத்து துறை முன்னுரிமை வழங்கும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை; தாம்பரம் பேருந்து நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்.!!