அடுத்த 5 நாட்களுக்கு நொறுக்கியெடுக்கப்போகும் வெயில்; தமிழக மக்களே உஷார்.!
அடுத்த 5 நாட்களுக்கு நொறுக்கியெடுக்கப்போகும் வெயில்; தமிழக மக்களே உஷார்.!
கோடைகாலம் இந்தியாவில் தொடங்கிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 9 இடங்களில் வெப்பம் 40 டிகிரியை கடந்துள்ளது. இன்று முதல் வரும் 5 நாட்களுக்கு வட தமிழகத்தின் உள் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசும். இதனால் வெப்பம் இயல்பாகவே அதிகம் இருக்கும்.
சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி வரை பதிவாகும். வெப்ப அலையின் காரணமாக பகலில் கடுமையான வெப்பநிலை உணரப்படும்.
இதனால் பகல் நேரங்களில் உடலில் நீர்சத்து குறையாமல் தற்காத்துக்கொள்ளவும், அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.