×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பள்ளிக் கல்வித் துறையில் புதிய வேலைவாய்ப்பு; டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு

tnpsc exam for district educational officers

Advertisement

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தேர்வின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 18 காலியிடங்கள் நிரப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 58 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், புவியியல், வரலாறு, வணிகவியல், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டமும் B.T. or B.Ed.  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ. 150-ஐ பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் முதன்மை தேர்வு கட்டணமாக ரூ. 100-செலுத்த வேண்டும். பின்னர் முதன்மை தேர்வில் வெற்றிபெறுபவர்கள் மெயின் தேர்விற்கு தனியா ரூ. 100- செலுத்த வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 09. 2019. கட்டணம் செலுத்த கடைசி நாள் 11-01-2019. முதன்மை எழுத்து தேர்வு 02-03-2019 அன்று நடைபெறும். மெயின் தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2018_37_notyfn_DEO.pdf 

தேர்வு செய்யும் முறை:


தேர்வு மையங்கள்:

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tnpsc #tnpsc exam #district educational officer #vacancy in tnpsc
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story