×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த மாதம் 27 ஆம் தேதி கடைசி நாள்: 1089 பணியிடங்கள் குறித்து டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு..!

இந்த மாதம் 27 ஆம் தேதி கடைசி நாள்: 1089 பணியிடங்கள் குறித்து டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு..!

Advertisement

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தி  நிரப்பப்பட்டு வருகிறது. தமிழக அரசு தூறைகளில் பல்வேறு படிநிலைகளில் உள்ள அரசுப் பணிகள்,  குரூப் 1, குரூப் 2 ,  2A, குரூப் 4 போன்ற பல தேர்வுகள் நடத்தி அதன் மூலம் நிரப்பப்படுகின்றன.

தற்போது நில அளவையர், வரைவாளர், உதவி அளவையர் மற்றும் உதவி வரைவாளர் உள்ளிட்ட 1089 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அடுத்த மாதம் (செப்டம்பர்) 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். தேர்வு 2 தாள்களாக நடத்தப்பட உள்ளது. நவம்பர் மாதம் 6 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும், அதே நாள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 2 ஆம் தாள் தேர்வும் நடைபெற உள்ளன.

பதவியின் பெயர் :  நில அளவையர், வரைவாளர், உதவி அளவையர் மற்றும் உதவி வரைவாளர்.

மொத்த காலியிடங்கள்: 1089 

நில அளவையர் : 794 +4

வரைவாளர் : 236

உதவி அளவையர்உதவி வரைவாளர் : 55

சம்பளம்   -  மாதம்   :   ரூ.19500-71900/

அறிவிப்பு  வெளியிடப்பட்ட நாள் :  29.07.2022

விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.08.2022

தேர்வு நடைபெறும் நாள் :  06.11.2022

தேர்வு முறை  :  ஆன்லைன் தேர்வு ( Online Exam)

கல்வித் தகுதி:  சிவில் எஞ்ஜினியரிங் பட்டயப் படிப்புகள் (Diploma in Civil Engineering) முடித்தவர்கள் (அல்லது) சம்மந்தப்பட்ட தொழிl துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்  பெற்றவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tnpsc #Surveyor #Draftsman #1089 Vacancies
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story