இல்லத்தரசிகளுக்கு ஷாக்.. மீண்டும் தாறுமாறாக உயர்ந்தது தங்கத்தின் விலை.! எவ்வளவு தெரியுமா?..!
இல்லத்தரசிகளுக்கு ஷாக்.. மீண்டும் தாறுமாறாக உயர்ந்தது தங்கத்தின் விலை.! எவ்வளவு தெரியுமா?..!
ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.4,775 என்று விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.38,200க்கு விற்பனையாகி வருகிறது.
தொடர்ந்து இன்று 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5174 என்றும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.41392 என்றும் விற்பனையாகிறது. அத்துடன் வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.68.80 என்றும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.68,800 என்றும் விற்பனையாகி வருகிறது.