#Breaking: தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. ரூ.65 ஆயிரத்தை நெருங்குகிறது.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
#Breaking: தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. ரூ.65 ஆயிரத்தை நெருங்குகிறது.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது.
ரூ.65 ஆயிரத்தை நெருங்குகிறது
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில் , கடந்த 6 மாதங்களுக்கு உள்ளாக ரூ 14 ஆயிரம் வரை விலை உயர்வு ஏற்பட்டு, தற்போது ரூ. 65 ஆயிரம் நோக்கி பயணம் செய்கிறது.
இன்று தங்கம் விலை
தங்கத்தின் விலை உயர்ந்தாலும், அதனை வாங்கும் மக்களின் எண்ணிக்கையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இந்நிலையில், இன்று சவரன் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.8035 க்கு விற்கப்படுகிறது.
இதையும் படிங்க: #Breaking: சேலத்தில் பயங்கரம்.. குழந்தைகள் இருவர் பலி., குடும்பத்தினர் 3 பேர் படுகாயம்.. சரமாரி தாக்குதல்.!
சவரன் தங்கம் விலை ரூ.520 உயர்ந்து, இன்று ரூ.64280 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.108000 க்கு விற்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிறையில் கஞ்சா, செல்போன் விற்க முயற்சி; காவலர் பணியிடைநீக்கம்.!