தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் பெட்ரோல், டீசல் விலை..! இன்றை விலை நிலவரம் என்ன தெரியுமா?
Today Perol, diesel status
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவது போல் பெட்ரோல், டீசல் விலையையும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதன்படி கடந்த 12 நாட்களுக்குள் பெட்ரோல் விலை 5 ரூபாய் 93 காசுகளும், டீசல் விலை 6 ரூபாய் 1 காசும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் 12 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 80 ரூபாய் 86 காசுக்கு விற்பனையான நிலையில் இன்று 46 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 81 ரூபாய் 32 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி ஒரு லிட்டர் டீசல் விலை நேற்று 73 ரூபாய் 69 காசுக்கு விற்பனையான நிலையில் இன்று 54 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 74 ரூபாய் 23 காசாக உயர்ந்துள்ளது. தொடர் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.