ஒரே நாளில் ₹.1000 உயர்ந்த வெள்ளி விலை.. தங்கத்தை தொடர்ந்து கிடுகிடுவென அதிகரிப்பு.!
ஒரே நாளில் ₹.1000 உயர்ந்த வெள்ளி விலை.. தங்கத்தை தொடர்ந்து கிடுகிடுவென அதிகரிப்பு.!
சமீப காலமாக அதிவேகமாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். முதலீட்டாளர்களுக்கு தங்க விலை உயர்வு மகிழ்ச்சியை கொடுத்தாலும், இல்லத்தரசிகள் ஆபரண தங்கத்தை வாங்க முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ₹.7940 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹.63,520க்கு விற்கப்படுகின்றது.
நேற்று ஒரு கிராம் வெள்ளி ₹.105 ஆக விற்கப்பட்ட நிலையில் ஒரு கிலோ வெள்ளி ₹.1.05 லட்சமாக இருந்தது. ஆனால், இன்று தங்கம் விலை நேற்றைய விலையிலேயே விற்கப்படும் நிலையில், வெள்ளியின் விலை அதிரடியாக கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ₹.1,06,000 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில், ஒரு கிராம் வெள்ளி ₹.106 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதையும் படிங்க: #JustIN: 14 வயது சிறார்கள் கும்பலால், அக்கா-தங்கை பலாத்கார முயற்சி.. ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்..! ஐவர் கைது.!
இதையும் படிங்க: மும்மொழி கொள்கை மோதல்: ஆங்கிலம் கற்றால் தமிழ் அழியாதா? தமிழிசை பேச்சு..!