தமிழகத்தில் எட்டாவது நாளாக மாற்றமின்றி காணப்படும் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்....
தமிழகத்தில் எட்டாவது நாளாக மாற்றமின்றி காணப்படும் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்....
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றம் செய்து வருகின்றன. அந்த வகையில் 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் 22-ம் தேதியில் இருந்து நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதாவது மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் 5 சதவீதமே எரிபொருள் விலை உயர்ந்துள்ளது என கூறியுள்ளது.
இந்நிலையில் எட்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.