விண்ணைமுட்டுபோகும் தக்காளியின் விலை; இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சியை கொடுத்த ஆய்வு முடிவு.!
விண்ணைமுட்டுபோகும் தக்காளியின் விலை; இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சியை கொடுத்த ஆய்வு முடிவு.!
இந்தியாவின் வடக்கு மாறும் வடகிழக்கு, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையின் காரணமாக வடக்கு மாநிலங்களில் பெரும்பாலானவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த விளைபொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் சேதமாகின. மழை தொடங்கிய சில நாட்களில் மெல்லமெல்ல உயர தொடங்கிய தக்காளியின் விலை தற்போது கிலோவுக்கு ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், Money Control செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மற்றும் களஆய்வுகளின் படி, தக்காளியின் விலை வரும் நாட்களில் வரலாறு காணாத அளவு உச்சமடைந்து கிலோ ரூ.300 க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மழைக்காலங்களில் இயல்பாக குறையும் காய்கறிகள் வரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி உணவகத்தில் விலையேற்ற போர்க்கொடி முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தக்காளியின் விலை விண்ணைமுட்டுவது பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.