மக்களே உஷார்.! நாளை பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்.!
மக்களே உஷார்.! நாளை பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்.!
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை 28-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியை தொடங்கிவைப்பதற்காக பிரதமா் மோடி நாளை வியாழக்கிழமை சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதனையடுத்து பிரதமா் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு அடையாறு ஐ.என்.எஸ் செல்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்கிறார். அங்கு 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்கும் விழாவில் கலந்து கொள்கிறாா்.
பிரதமர் மோடி வருகையையொட்டி நாளை நண்பகல் முதல் இரவு 9 மணி வரை ராஜாமுத்தையா சாலை, ஈ.வெ.ரா.பெரியார் சாலை, மத்திய சதுக்கம், அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ஈ.வெ.கி.சம்பத் சாலை, ஜெர்மையா சாலை சந்திப்பில் இருந்து, ராஜாமுத்தையா சாலை நோக்கி வாகனங்கள் செல்ல முடியாது. வணிக வாகனங்கள் ஈ.வெ.ரா.பெரியார் சாலை, கெங்குரெட்டி சாலை சந்திப்பு, நாயர்பால சந்திப்பு மற்றும் காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்டிரல் நோக்கி செல்ல முடியாது.
பிராட்வேயில் இருந்து வரும் வணிக வாகனங்கள், குறளகம், தங்க சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கி திருப்பி விடப்படும். வியாசர்பாடி மேம்பாலம் வழியாக சென்று தங்களது வழித்தடங்களை வாகன ஓட்டிகள் சென்றடையலாம். சென்டிரல் ரயில் நிலையம் வரும் பொதுமக்கள் தங்களது பயண திட்டத்தை முன் கூட்டியே வகுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.