×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உலகில் இந்த 5 நாடுகள் காணாமலே போகும்.. காரணம் என்ன?.. பகீர் கிளப்பும் ஜோதிடர்..! 

உலகில் இந்த 5 நாடுகள் காணாமலே போகும்.. காரணம் என்ன?.. பகீர் கிளப்பும் ஜோதிடர்..! 

Advertisement

 

சென்னையை சேர்ந்தவர் விஜய் ரிஷி (Astrologer Vijay Rishi). இவர் வெளிநாட்டில் பட்டம் பயின்றுவிட்டு, தற்போது மறுபிறவி ஞாபகம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஜோதிடம் கூறி வருகிறார். இவர் ஜோதிடம் படிக்காமலேயே தற்போது மறுபிறவி ஞாபகரம் காரணமாக ஜோதிடத்தை கணித்து கூறி வருவதாக தெரிவித்து வருகிறார். 

சமீபத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து, உலக நாடுகளே போர் அச்சத்தில் சிக்கவிருப்பதாகவும், யுரேனஸ் கிரகத்தின் தாக்கத்தால் மூன்றாவது உலகப்போர் ஏற்பட்டு 5 நாடுகள் உலகில் இருந்தே காணாமல் போகும் என்றும் கூறி அதிரவைத்துள்ளார். 

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை சுனாமி, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றத்தால் உலகளவில் அழிவுகள் ஏற்படும். மே மாதத்திற்கு பின் மிகப்பெரிய போரில் அமெரிக்கா சென்று கால்களை வைக்கும். இதற்கு பின் 2026 வரையில் அப்போர் தொடரும். 

கடந்த 2019ம் ஆண்டு முதல் தொடங்கி, 2024ல் உச்சம்பெற்று 2026 வரை போர் நடைபெறும். ஈரான், இஸ்ரேல், பாலஸ்தீனியம், வடகொரியா, தைவான் ஆகிய நாடுகள் போரினால் பாதிக்கப்படும். இந்நாடுகள் உலக நாடுகளின் பட்டியலில் இருந்து மறையவும் வாய்ப்புள்ளது. வடமாநிலங்களில் மதரீதியான விஷயங்கள் பெரும் பிரச்சனையாகும். 

கடந்த 1939ம் ஆண்டு முதல் 1948 வரையில் யுரேனஸ் கிரகம் வந்த அமைப்பு மீண்டும் வந்துள்ளது. இதனால் கட்டாயம் பூமியில் போர் நடக்கும், அழிவுகள் ஏற்படும். பொருளாதார பாதிப்பு, போர் வாய்ப்புகள் அதிகம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாடுகளில் நடக்கும் போரைத்தொடர்ந்து, இறுதியில் அமெரிக்கா மிகப்பெரிய போரில் களமிறங்கும். மத்திய கிழக்கில் ஆரம்பிக்கும் போர் உலகளவில் பரவும். 

நான் இவற்றை கூறுவது, கிரக அமைப்பை தெரிந்துகொண்டால் போர்களை தவிர்க்கலாம், வளர்ச்சியை மேம்படுத்தலாம். ஜோதிடமும் அறிவியல் என நிறுவப்பட வேண்டும். காலச்சக்கரம் கிரகத்தினால் மட்டுமே இயக்கப்படுகிறது. ஐ.நா சபை உலகப்போர் இரண்டுக்கு பின் அமைக்கப்பட்டாலும், இன்று அவர்கள் கூறுவதை கேட்பது இல்லை, மதிப்பதும் இல்லை. 

யுரேனஸ் 84 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியை சுற்றும். அப்போது இவை அனைத்தும் அடுத்தடுத்து நடக்கும். இதனை நிரூபணம் செய்ய நான் தயார். போர்களை தடுக்க ஜோதிடம் அறிவியல் என அறிவிக்கப்பட வேண்டும். அதனை நம்பினால் தீர்வு நிச்சயம். அறிவியல் மூலமாகத்தான் உலக மக்களுக்கு அமைதி கிடைக்கும்" என கூறினார்.

Video Thanks: Galatta Media

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#astrologer #Vijay Rishi #Earth #War
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story