×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மேகமலை அருவிக்கு சுற்றுலா வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினருக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை..!

மேகமலை அருவிக்கு சுற்றுலா வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினருக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை..!

Advertisement

மேகமலை அருவிக்கு தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

அருவியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே‌ நிலவுகிறது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கோம்பைதொழுவில் மேகமலை அருவி அமைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் மேகமலை அருவியில்  குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்ததுள்ளனர். தற்போது மேகமலை அருவியில் குறைந்த அளவிலான நீர்வரத்து மட்டுமே உள்ளது.

இருப்பினும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் அருவியில் குளிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேகமலை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தலா ரூ. 30 வீதம் வரை ‌வனத்துறையினர் சார்பில் பணம் வசூல் செய்யப்படுகிறது.

வனத்துறையினர் சார்பில் அங்கு வரும் வாகனங்களுக்கு பணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் வாகனங்கள் நிறுத்துவதற்கான எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை. அருவியிலும் பாதுகாப்பு வேலி, சாலை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும் பெண்களுக்கான உடை மாற்றும் அறை முழுவதும் முட்செடிகள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. இதனால் பெண்கள் திறந்தவெளியில் உடை மாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதேபோல அருவியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை.

இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அருவிக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே காணப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகளிடம் வசூல் செய்யும் பணத்தின் மூலம் அருவியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும், மேலும் வனத்துறையினர் அவ்வப்போது அருவியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என சுற்றுலா வருபவர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Meghamalai #Theani #Dindigul #Forest Department #Safety of women
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story