தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிம்புவின் சகோதரர் மதம் மாற்றம்; மதங்கள் குறித்து டி.ஆர் கூறிய கருத்து!

Tr talks about son religion convertion

Tr talks about son religion convertion Advertisement

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமையாளராக, மிகப்பெரிய வெற்றிப் படங்களைத் தந்தவர் டி.ராஜேந்தர். இவரது மூத்த மகன் நடிகர் சிம்பு. இளைய மகன் குறளரசன், சிம்பு நடித்த இது நம்ம ஆளு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்நிலையில், தன் பெற்றோர் சம்மதத்துடன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மெக்கா மசூதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

simbu

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டி ராஜேந்தர் ``குறளரசனுக்கு சிறு வயதிலிருந்தே இஸ்லாம் மார்க்கத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார். தற்போது, இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். நானும் அனைத்து மதத்துக்கும் பொதுவானவன்.

நான் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி கோயில், முருகன் கோயில் என அனைத்து ஸ்தலத்துக்கும் செல்வேன். எனது தஞ்சை சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின்  எம்ப்ளத்தை கூட அனைத்து மதத்தின் குறியீடுகளும் கொண்டுதான் வடிவமைத்தேன்’’ என்று கூறியுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#simbu #tr # #Kuralarasan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story