திருமணத்தில் ஆர்வம் இல்லாத இளம் பெண் செய்த காரியத்தால் நிகழ்ந்த சோகம்!.. ஊத்துக்குளி அருகே பரிதாபம்..!
திருமணத்தில் ஆர்வம் இல்லாத இளம் பெண் செய்த காரியத்தால் நிகழ்ந்த சோகம்!.. ஊத்துக்குளி அருகே பரிதாபம்..!
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகேயுள்ள தளவாய்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரியா (25). இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் பிரியாவுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் கணவரை பிரிந்து அவரது வீட்டில் இருந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இதனையடுத்து பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை சமாதானம் செய்து வந்துள்ளனர். இருந்த போதிலும் அவருக்கு திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாததால் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊத்துக்குளி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரியாவின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.