கன்னியாகுமரியில் சோகம்.. திருமணமான சில மாதங்களிலேயே மனைவி குத்தி கொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
கன்னியாகுமரியில் சோகம்.. திருமணமான சில மாதங்களிலேயே மனைவி குத்தி கொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் திப்பிரமலை பகுதியில் வசித்து வரும் சாம் மரியதாஸ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெனிலா ஜோபி என்ற இளம் பெண்ணுக்கும் பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டு திருமணம் நடைபெற்றது.
இதனையடுத்து சாம் மரியதாஸ் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால் திருமணம் முடிந்த கையோடு பெங்களூர் சென்று தனது மனைவி ஜெனிலா ஜோபியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களாகவே கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் சம்பவத்தன்று கணவன் மனைவி இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டதால் ஜெனிலா ஜோபி கோபித்துக் கொண்டு படுக்கை அறையில் உறங்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கணவர் சாம் மரியதாஸ் தனது மனைவியை கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த கர்நாடக போலீஸார் சாம் மரியதாசின் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் ஜெனிலா ஜோபியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஜெனிலா ஜோபியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து தங்களது மகளின் உடலைப் பெற்றுக் கொண்ட பெற்றோர் ஆம்புலன்ஸ் மூலம் ஜெனிலாவின் கணவரான சாம் மரியதாஸின் வீட்டிற்கு கொண்டு சென்று அவரது வீட்டின் வளாகத்தின் முன்பே அடக்கம் செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சாம் மரியதாஸ் வேலை செய்யும் நிறுவனத்தில் வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்ததால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை குத்தி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.