ரயில் பயணிகளே உஷார்! இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு ஆரம்பம்! பொங்கல் விழாவை மிஸ் பண்ணிடாதீங்க!
train ticket reservation start today
தீபாவளி, பொங்கல் என விசேஷ நாட்களில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல மூன்று மாதங்களுக்கு முன்னரே ரயிலில் முன்பதிவு செய்வது வழக்கம். பொதுவாக விழா காலங்கள் என்றாலே ரயில் டிக்கெட் முன்பதிவு ஒரு சில நிமிடங்களில் முடிந்துவிடும்.
அதேபோல் விசேஷ நாட்களில் தனியார் பேருந்துகளின் கட்டணம் அதிக அளவிற்கு உயர்ந்து மக்கள் சிலர் சொந்த ஊருக்கே செல்லாத நிலை ஏற்படும். இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் இன்று துவங்குகிறது.
இன்று காலை 8 மணி முதல், ஜனவரி 10ஆம் தேதிக்கான முன்பதிவு தொடங்குகிறது. அதேபோல் ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை செப்டம்பர் 13ஆம் தேதியும், ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 14ஆம் தேதியும் தொடங்குகிறது.
ஜனவரி 13ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 15ஆம் தேதியும், ஜனவரி 14ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 16-ஆம் தேதியும், ஜனவரி 15-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 17-ஆம் தேதியும், ஜனவரி 16-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 18-ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.
எனவே பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் ரயில் பயணிகள் இன்று முதல் உஷாராக மணிக்கு முன்பதிவு செய்துகொண்டால் பொங்கல்விழாவை சொந்த ஊரிலேயே கொண்டாடலாம்.