திருநங்கைகளை உடல்தகுதித் தேர்வில் அனுமதிக்காவிட்டால், உயர்நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை!
transgender people allowed to take body exams
காவல்துறை பணிகளுக்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் விண்ணப்பங்களை வரவேற்றது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்த திருநங்கைகளான தீபிகா, ஆராதனா, தேன்மொழி, சாரதா ஆகிய நான்குபேரும் தங்களை உடல் தகுதி தேர்வுக்கு அழைக்காததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
திருநங்கைகள் நான்குபேரும் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்கள் நான்கு பேரையும் உடல்தகுதித் தேர்விற்கு அனுமதிக்க சீருடை பணியாளர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவின்படி தங்களை உடல்தகுதித் தேர்விற்கு அனுமதிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 திருநங்கைகளும் மீண்டும் மனுதாக்கல் செய்திருந்தனர்.
திருநங்கைகள் தீபிகா, ஆராதனா, தேன்மொழி, சாரதா ஆகியோர் தொடுத்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் நான்கு திருநங்கைகளையும் உடற்தகுதி தேர்வில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை, டிசம்பர் 5- ஆம் தேதிக்குள் அமல்படுத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை நிறைவேற்றாவிட்டால் ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகளுக்கும் தடை விதிக்க நேரிடும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.