திருநங்கை காவலர் தற்கொலை முயற்சி!. அவர் கூறும் அதிர்ச்சி காரணம், வைரலாகும் வீடியோ!.
transgender police commits suicide
பரமக்குடியைச் சேர்ந்த திருநங்கையான நஸ்ரியா, பல்வேறு போராட்டங்களைக் கடந்து காவலர் பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டார். இந்நிலையில், நேற்றிரவு, நஸ்ரியா எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்த தற்கொலை முயற்சியைத் அவரது செல்போனில் பதிவிட்டு, தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதை அறிந்த சிலர், நஸ்ரியாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆயுதப்படையில் எழுத்தராகப் பணியாற்றும் பார்த்திபன், சார்பு ஆய்வாளர் ஜெயசீலன் மற்றும் ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் தன்னைப்பற்றியும், தனது நடத்தைகுறித்தும் தரக்குறைவாகப் பேசுவதாகவும், அவர்களது தொந்தரவினாலேயே தான் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் நஸ்ரியா கூறியுள்ளார்.
எனது மரணத்திற்கு பிறகு, என் சாவுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள் என கூறியுள்ளார் திருநங்கையான நஸ்ரியா. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது