நிவர் புயலால் கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த கோரசம்பவம்! பார்ப்போரை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ இதோ!
சாலையில் நடந்து சென்றவர் மீது மரம் வேரோடு சாய்ந்த சிசிடிவி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
கடந்த 21ஆம் தேதி தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவாகி நிவர் புயலாக மாறியது. அதனைத் தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்த புயல் அதிதீவிர புயலாக மாறிய நிலையில், நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்க துவங்கி நிவர் பஇன்று அதிகாலை கரையை கடந்துள்ளது.
இந்நிலையில் நிவர் புயலை முன்னிட்டு தமிழகத்தில் பல பகுதிகளில் கடுமையான மழை மற்றும் புயல் காற்று வீசியது. மேலும் சென்னையில் பல இடங்களில் கனமழையால் வெள்ளம் உருவாகி பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையோரங்களில் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அதனை தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் சாலையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அந்த நபர் மீது மரம் விழுந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.