17 வயது மாணவனை லவ்விய ஆசிரியை... கோவிலில் திருமணம்., தோழி வீட்டில் டூயட்.. போக்ஸோவில் கைதான பரிதாபம்.!
17 வயது மாணவனை லவ்விய ஆசிரியை... கோவிலில் திருமணம்., தோழி வீட்டில் டூயட்.. போக்ஸோவில் கைதான பரிதாபம்.!
12 ஆம் வகுப்பு மாணவனுடன் தலைமறைவான ஆசிரியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன், அங்குள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் கடந்த 5 ஆம் தேதி திடீரென மாயமாகி இருக்கிறார். இதனையடுத்து, மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே நாளில் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த சர்மிளா என்பவரும் மாயமாகியுள்ளதை அறிந்துள்ளனர். அவரின் அலைபேசியை ஆய்வு செய்கையில் திருவாரூர், தஞ்சாவூர் என பல்வேறு பகுதிகளை காண்பித்துள்ளது.
இறுதியில், திருச்சியில் உள்ள எடைமலைப்புதூர் பகுதியில் இருக்கும் தோழியின் வீட்டில் வைத்து சர்மிளா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், 17 வயது மாணவனை அவர் காதலித்து வந்ததும், திருவண்ணாமலை அழைத்து சென்று திருமணம் செய்துகொண்டதும் அம்பலமானது.
இதனையடுத்து, 17 வயது மாணவனை கடத்தி சென்று திருமணம் செய்ததாக ஆசிரியை ஷர்மிளாவின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.