தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்; தலைமறைவான அரசியல்கட்சி பிரமுகருக்கு காவல்துறை வலைவீச்சு.!

2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்; தலைமறைவான அரசியல்கட்சி பிரமுகருக்கு காவல்துறை வலைவீச்சு.!

Trichy Manachanallur DMK Supporter Absconding After Cops Filing POcso Act  Advertisement

 

சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக பிரமுகரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர், சுனைமுக நல்லூர் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தன். இவர் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். தற்போது திமுகவில் தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: திருச்சியில் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்; அதிர்ச்சியில் மக்கள்.. காவல்துறை விளக்கம்.!

trichy

பலாத்காரம் & மிரட்டல்

இதனிடையே, ஆனந்தன் 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. இந்த விஷயம் குறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் எனவும் மிரட்டிய அவர், சிறுமிகளை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

தலைமறைவானவருக்கு வலை

இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் தரப்பில் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற ஜீயபுரம் காவல்துறையினர் ஆனந்தனை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "துரித உணவு உடல் நலனுக்கு எமன்" - ஆசையாக வாங்கி சாப்பிட்டு 18 வயதில் அகால மரணம்.. திருச்சியில் சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#trichy #tamilnadu #dmk #Rape #sexual abuse
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story