தாய்ப்பால் குடித்துவிட்டு உறங்கிய கைக்குழந்தை மர்ம மரணம்; பிறந்து 7 நாட்களில் நடந்த சோகம்.!
தாய்ப்பால் குடித்துவிட்டு உறங்கிய கைக்குழந்தை மர்ம மரணம்; பிறந்து 7 நாட்களில் நடந்த சோகம்.!
அதிகாலை 3 மணியளவில் விழித்த குழந்தை தாய்ப்பால் குடித்துவிட்டு உறங்கியபின் மர்ம மரணம் அடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, மருங்காபுரி ஒன்றியம், கோசிபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சாமி (வயது 35). இவரின் மனைவி மீனா. தம்பதிகளுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி உயிரிழந்த 12 வயது சிறுவன்; அலட்சியத்தில் இருந்து மீண்டுவராத அதிகாரிகள்.!
இதனிடையே, சமீபத்தில் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்த மீனா, கடந்த 7 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனையடுத்து, மீனா தனது கைக்குழந்தையோடு வையம்பட்டி, குமாரவாடி ஊராட்சி, கேசவ அம்பலக்காரனூர் கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டில் இருக்கிறார்.
தாய்ப்பால் குடித்துவிட்டு உறங்கிய குழந்தை மரணம்
இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று குழந்தைக்கு அதிகாலை 3 மணியளவில் பால் கொடுத்துவிட்டு உறங்கவைத்துள்ளார். பின் மீண்டும் 6 மணிக்கு எழுந்து பார்த்தபோது, குழந்தை பேச்சு மூச்சின்றி இருந்துள்ளது. இதனால் அதிர்ந்துபோன பெண்மணி, உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளார்.
அங்கு குழந்தையின் மரணம் உறுதி செய்யப்படவே, தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வையம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்,
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த இளைஞரின் ஆணுறுப்பை நசுக்கி சித்ரவதை; நா.த.க பிரமுகர் உட்பட 6 பேர் அதிர்ச்சி செயல்.!