ஆட்டோ - 2 வீலர் நேருக்கு நேர் மோதல்.. பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் துடிதுடித்து மரணம்.!
ஆட்டோ - 2 வீலர் நேருக்கு நேர் மோதல்.. பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் துடிதுடித்து மரணம்.!
இருசக்கர வாகனம் - ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 3 வயது குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை சேர்ந்தவர்கள் குமரேசன். இவரின் மனைவி ஆனந்தி. குமரேசனின் நண்பர் முருகன். முருகனின் மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய குழந்தை இருக்கிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று கோவை சென்றிருந்தவர்கள், மீண்டும் மணப்பாறைக்கு வந்துகொண்டு இருந்தனர். இன்று அதிகாலை நேரத்தில் 2 ஜோடிகளும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புத்தரச்சல் அருகே வந்துள்ளது.
அப்போது, சாலையில் எதிரே வந்த ஆட்டோ இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், குமரேசன், முருகன், முருகனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 வயது குழந்தை என 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பலியாகினர்.
மேலும், குமரேசனின் மனைவி ஆனந்தி மட்டும் படுகாயத்துடன் உயிருக்கு துடித்துள்ளார். அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விபத்தில் பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஆட்டோ ஓட்டுனருக்கு வலைவீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.