திருச்சி: பகீர் சம்பவம்... 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... 7 சிறுவர்களை தட்டி தூக்கிய காவல் துறை.!
திருச்சி: பகீர் சம்பவம்... 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... 7 சிறுவர்களை தட்டி தூக்கிய காவல் துறை.!
திருச்சியைச் சார்ந்த 11 வயது சிறுமிக்கு சிறுவர்கள் சிலர் கூட்டு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஏழு சிறுவர்களை காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சார்ந்த 11 வயது சிறுமியை ஏழு இளைஞர்கள் சேர்ந்து பாழடைந்த கட்டிடத்திற்குள் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் இதனை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து இருக்கின்றனர்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பதிவு செய்த புகாரை தொடர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட் காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு சிறுவர்களை கைது செய்தனர் மேலும் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுவர்களிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. மேலும் அவர்கள் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ தொடர்பாகவும் காவல்துறை சைபர் க்ரைமின் மூலம் ஆய்வு செய்து வருகிறது.