என்ட்ட பேசு., இல்லைனா அதை ரிலீஸ் பண்ணிடுவேன்.. இன்ஸ்டா நண்பனை நம்பிய இளம்பெண்ணுக்கு வந்த வினை.!!
இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்., 23 வயது இளம்பெண்ணுக்கு விடுதியில் நேர்ந்த துயரம்.!
இணையவழியில் அறிமுகமான நண்பனை நம்பிச் சென்ற பெண், ஆபாசமாக படமெடுக்கப்பட்டு மிரட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் 23 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். அப்போது, இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டுள்ளார்
இன்ஸ்டாகிராமில், கடலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டுமுல்லை கிராமம், காந்தி தெருவில் வசித்து வரும் மு.தினேஷ் (வயது 31) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, நட்பு ரீதியாக தொடர்ந்து இருக்கிறது.
இதையும் படிங்க: திருமணமாகாத ஏக்கம்... 36 வயது இளைஞர் தற்கொலை.! திருச்சியில் சோகம்.!
அறையெடுத்து தங்கியபோது கொடுமை
கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தினேஷ் தனது காரில் வேலூருக்கு சென்று, பெண்ணை உணவகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின் இருவரும் அங்கு அறையெடுத்து தங்கி இருந்ததாக தெரியவருகிறது.
பகிரங்க மிரட்டல்
அப்போது, தினேஷ் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பெண்ணை நிர்வாணமாக ஆபாச படம் எடுத்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த பெண், தினேஷுடன் பேசுவதை நிறுத்தி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், நீ என்னுடன் பேசவில்லை என்றால் உன் ஆபாச புகைப்படத்தை வெளியிடுவேன் என மிரட்டி இருக்கிறார்.
காவல்துறையினர் விசாரணை
இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி கடந்த நவம்பர் மாதம் 5ஆம் தேதி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இதன் பேரில் அதிகாரிகள் தினேஷுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், தினேஷ் மலேசியாவில் இருந்து விமானம் மூலமாக கொச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த நிலையில், அவரை தடுத்து வைத்த குடியேற்ற பிரிவு அதிகாரிகள், திருச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தனிப்படை காவல்துறையினர் கொச்சிக்கு சென்று, தினேஷை கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருப்பத்தூர்: சார்ஜர் ஒயரால் பெண்ணின் கை-கால்களை கட்டிப்போட்டு செயின் திருட்டு.! வீடுபுகுந்து துணிகரம்.!