சின்னம் வழங்கப்படாத நிலையில் டிடிவி தினகரன் எடுத்த முடிவு! சூடு பிடிக்கும் அரசியல் களம்!
ttv Dhinakaran started canwass
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதேநாளில் காலியாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அணைத்து கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் அமமுக-விற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் சார்பில் கோரப்பட்டது. அமமுக ஒரு கட்சியாக இதுவரை பதிவாகவில்லை என்பதால் அமமுக-விற்கு பொதுச் சின்னம் ஒதுக்குவது என்பது இயலாத காரியம் என தேர்தல் ஆணையம் கூறியது.
இதனையடுத்து உச்சநீதிமன்றம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பொதுச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தொிவித்துள்ள நிலையில் தோ்தல் ஆணையம் பொதுச் சின்னம் வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.
இந்தநிலையில் சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் நேற்று தனது தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினாா். பிரசாரத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று வேட்பாளா்களுடன் இணைந்து மரியாதைச் செலுத்தினாா்.