தேர்தல் முடிவுக்கு பிறகு டிடிவி தினகரன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதுவரை
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதுவரை எண்ணப்பட்ட முடிவுகளின்படி ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வந்த நிலையில், திமுக 158 இடங்களில் முன்னிலையிலும், அதிமுக 76 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
இந்தமுறை நடைபெற்ற தேர்தலில், அதிமுக இரண்டாக பிளவுபெற்று போட்டியிட்டதே என்று கூறலாம். ஆம்.. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அதன் பிறகு சசிகலா சிறை சென்றார். பின்னர் சசிகலா சிறையில் இருந்து வந்தபிறகு அதிமுக ஒன்றாக இணைந்து செயல்படும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் மறுபடியும் ஏற்பட்ட குளறுபடியால் சசிகலா அவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தார். ஆனாலும் கட்சியை காப்பாற்ற டிடிவி தினகரன் முக்கிய கட்சிகளை கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.
ஆனால் இந்த தேர்தலில் டிடிவி தினகரன் அவர்கள் கோவில்பட்டி தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் கடம்பூர் ராஜு வெற்றி பெற்றார். இந்தநிலையில் டிடிவி தினகரன் கழக தொண்டர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். தேர்தலில் களப்பணி ஆற்றிய கழக உடன்பிறப்புகளுக்கும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.