டி.டி.வி.தினகரனின் அதிரடி அறிவிப்பு!. அவரின் அதிரடி முடிவால் அதிமுக குழப்பம்!.
ttv Dhinakaran talking about 18 MLA case
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்த விவகாரத்தில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவான 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.
சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவான 18 எம்.எல்.ஏ-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் இருவேறு மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனையடுத்து அந்த வழக்கு, மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து சிலதினங்களுக்கு முன்பு தினகரனின் ஆதரவு 18 எம்எஎல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்பளித்தது. மேலும், அந்த எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையையும் ரத்துசெய்தது.
இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன், தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவது இல்லை என்றும், தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இடைத்தேர்தல்களில் டெபாசிட் வாங்க கூட அதிமுக போராட வேண்டி இருக்கும் என கூறினார்.