கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவருக்கு ஸ்கெட்ச் போட்ட பெண்.! கைது செய்த போலீசார்.!
கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவருக்கு ஸ்கெட்ச் போட்ட பெண்.! கைது செய்த போலீசார்.!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டம்பட்டி என்ற இடத்தைச் சார்ந்தவர் அழகு சுந்தரபாண்டியன். இவருக்கு திருமணமாகி புனித எப்சிபா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி அழகு சுந்தரபாண்டியன் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த நான்கு பேர் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த வரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையில் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்தக் கொலை முயற்சி தொடர்பாக அவரது மனைவி, மாரி ராஜ் உட்பட மூன்று பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எப்சிபா மற்றும் கவுண்டம்பட்டியை சார்ந்த மாரி ராஜ் இடையே தகாத உறவு இருந்திருக்கிறது. அதற்கு அழகு சுந்தரபாண்டியன் இடையூறாக இருந்ததால் மாரிராஜன் நண்பர் சரவணன் என்பவர் உடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி அழகு சுந்தரபாண்டியனை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தது பெரிய வந்திருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய கூலிப்படையினரை காவல்துறை தேடி வருகிறது.