×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"என் நெஞ்சமே பதறுகிறது" - திருவண்ணாமலை நிலச்சரிவு மரணங்களுக்கு, தவெக தலைவர் விஜய் இரங்கல்.!

என் நெஞ்சமே பதறுகிறது - திருவண்ணாமலை நிலச்சரிவு மரணங்களுக்கு, தவெக தலைவர் விஜய் இரங்கல்.!

Advertisement

 

தீபமாலை நிலச்சரிவு மரணத்திற்கு நடிகரை விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தீபமாலை பகுதி, வஉசி நகரில் மலையை ஒட்டிய குடியிருப்புகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, மூன்று வீடுகள் மண்ணோடு மண்ணாகின. இதில் பெரிய அளவிலான பாறை வீட்டின் மீது உருண்டது. 

இதையும் படிங்க: #Breaking: "தூற்றுவோரை போற்றுவோம்?" - சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய்.!

இதனால் நிலச்சரிவுக்கு அடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உட்பட 7 பேர் சிக்கிக்கொண்டனர். இவர்கள் அனைவரும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் ரூபாய் ஐந்து லட்சம் நிதி உதவி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் இரங்கல்

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நிலச்சரிவு மற்றும் அதனால் ஏற்பட்ட மரணம் குறித்த தகவல் அறிந்து தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பான பதிவில், "திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

மீட்புப் படையினரின் பணி அளப்பரியது

கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழக அரசுக்கு கோரிக்கை

இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #Big News: ஒரேயொரு ட்விட்.. மொத்த தமிழக அரசியல்களமும் அதிர்ச்சி.. பாமக ராமதாஸ் சொல்ல வருவது என்ன?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TVK Vijay #Tiruvannamalai #Landslide #rain #திருவண்ணாமலை நிலச்சரிவு #தவெக விஜய்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story