தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாஜகவின் போராட்டத்தை கலாய்த்து, #பிரியாணிஅண்டா_பத்திரம் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்..!

பாஜகவின் போராட்டத்தை கலாய்த்து, #பிரியாணிஅண்டா_பத்திரம் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்..!

Twitter DMK and Alliance Party Netizens Troll Trend BJP Protest Biryani Safe Advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த சிறுமி லாவண்யா, அங்குள்ள கிருத்துவ பள்ளியில் பயின்று வந்துள்ளார். இவரை மதம் மாறச்சொல்லி பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் தொல்லை கொடுத்து அவமதிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாணவியின் தற்கொலையில் மதமாற்ற சர்ச்சை இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முதல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வரை பேட்டியளித்துவிட்டனர். ஆனால், பாரதிய ஜனதா கட்சி மதமாற்றம் தொடர்பான வற்புறுத்தலால் சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என தெரிவித்து வருகிறது. 

thanjavur

தஞ்சாவூரில் மாபெரும் போராட்டத்தை நடத்திய தமிழ்நாடு பாஜக, நாளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. தமிழக அரசு நிர்வாகிகள் சிறுமியின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரணை செய்து வரும் நிலையில், பாஜகவின் பொருத்தம் தேவையற்றது என கூறும் இடதுசாரி அமைப்பினர், அவர்களை விமர்சித்து ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thanjavur #tamilnadu #dmk #bjp #protest #troll #hashtag #Trending
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story