தமிழகத்தில் மதுவுக்கு அடிமையான தாய்! கல்வி கற்க ஆசையாய் இருக்கும் இரண்டு பிள்ளைகள் பிச்சை எடுக்கும் அவலம்!
Two child begging for mom drunk addicted
காஞ்சிபுரம் மாவட்டம் காமாட்சி அம்மன் கோயில் அருகே தாய் ஒருவர், கல்வி கற்க ஆசைப்படும் இரண்டு குழந்தைகளை பள்ளியில் இருந்து நிறுத்தி விட்டு பிச்சை எடுக்க வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் காமாட்சி அம்மன் கோயில் அருகே தாய் ஒருவர், கல்வி கற்க ஆசைப்படும் இரண்டு குழந்தைகளை பள்ளியில் இருந்து நிறுத்தி விட்டு பிச்சை எடுக்க வைத்து வருகிறார். போதைக்கு அடிமையான அந்த தாயால், இரு குழந்தைகளும் எதிர்காலத்தை தொலைத்து நிற்பதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
தகுதி இல்லாத தாயின் மதுப் பழக்கத்திற்காக, விருப்பம் இல்லாமல் பிச்சை எடுத்து வரும் இரு சிறுவர்களையும் மீட்டு, நல்ல கல்வி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த தகவலை அறிந்த அதிகாரி ஒருவர், காமாட்சி அம்மன் கோயில் வாசலில் தங்கியிருக்கும் இரு சிறுவர்களையும் மீட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
படிக்க ஆசைப்படும் அந்த இரண்டு சிறுவர்களையும் போதைக்கு அடிமையான பெற்ற தாயே கைவிட்ட நிலையில், அவர்களை நன்றாக படிக்க வைத்து, நாட்டிற்கு சேவையாற்றும் அளவுக்கு வளர்த்து விடும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மதுவினால் 20% மக்கள் அழிந்த நிலையில் தற்போது பெண்களும் போதைக்கு அடிமையாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.