'வஞ்சம் தீர்த்த வாலிபர்கள்..' இளம்பெண்ணுக்கு கத்தி குத்து.!! 2 இளைஞர்கள் கைது.!!
'வஞ்சம் தீர்த்த வாலிபர்கள்..' இளம்பெண்ணுக்கு கத்தி குத்து.!! 2 இளைஞர்கள் கைது.!!
தூத்துக்குடியில் இளம் பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 நபர்களிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் முன்பகை காரணமாக தாக்குதல் சம்பவம் நடைபெற்றது தெரிய வந்திருக்கிறது.
இளைஞர் மீது புகார்
தூத்துக்குடி மாவட்டம் முனியசாமிபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பைரவன். இவருக்கு திருமணமாகி செல்வராணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் வருடம் செல்வராணிக்கும் அவரது வீட்டின் அருகே வசித்து வந்த பொன்ராஜ் என்ற 24 வயது இளைஞருக்கும் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் பொன்ராஜை காவல்துறை கைது செய்து சிறையிலடைத்தது.
கத்தியால் குத்தப்பட்ட செல்வராணி
இந்நிலையில் தான் கைது செய்யப்பட்டதற்கு காரணமான செல்வராணியை பழி தீர்க்க வேண்டும் என்ற வன்மத்துடன் தனது நண்பரான யோகேஷ் குமார் என்பவருடன் செல்வராணி வீட்டிற்கு வந்திருக்கிறார் பொன்ராஜ். அப்போது செல்வராணியிடம் தகராறு செய்ததோடு அவரை கத்தியால் குத்தி விட்டு பொன்ராஜ் மற்றும் யோகேஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: #Breaking: 4 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
குற்றவாளிகள் கைது
இந்நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்த செல்வராணியை மீட்ட அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறையிலும் புகாரளித்தனர். அவர்களது புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் பொன்ராஜ் மற்றும் யோகேஷ் குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்பகையால் இளம் பெண் தாக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: Trending Video: கடலில் இருந்து நீரை உறிஞ்சும் பெஞ்சல் புயல்; மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ.!