தலைமைக் காவலருக்கு கருப்பு பூஞ்சை.! நேரில் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும்நிலையில் தற்பொழுது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது. பலர் இந்த பூஞ்சையால் தினமும் புதிதாக பாதிக்கப்படுவதுடன், உயிரிழக்கவும் நேரிடுகிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவில் கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. தமிழகத்திலும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், திருவாலாங்காடு காவல் நிலைய தலைமைக் காவலர் புஷ்பராஜ் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இன்று அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின். இதுதொடர்பான புகைப்படங்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவர் பூரண குணமடைய வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா சமயத்தில் சேப்பாக்கம் தொகுதியில் வார்டு கவுன்சிலர் போல் வேலை செய்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். வார்டு கவுன்சிலர் கூட இந்த அளவுக்கு இறங்கி வேலை செய்வாரா என்பது சந்தேகம் தான். என அவரது ட்விட்டர் பதிவிற்கு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.