×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சமூகவலைத்தளத்தில் விநாயகர் சிலையை பதிவிட்டது ஏன்? உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

udhayanithi talk about shared vinayagar statue in twitter

Advertisement

திமுக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் விநாயகர் சிலையின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். ஆனால் அவரது பதிவு குறித்து சமூக ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்திய பின்னர், அது தனது மகளின் விருப்பத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று  உதயநிதி ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.

சிலை வழிபாட்டை நிராகரிக்கும் திராவிடக் கட்சியில் இருந்து ஏன் இப்படி ஒரு பதிவு அரசியலுக்காகவா? என அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகளின் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். திமுக ஒன்றும் கடவுள் எதிர்ப்பு இயக்கமல்லவே.. கழகத்தோழர்களுக்கு பிள்ளையார் மேல் வெறுப்பேதும் இல்லை. ஏன் விநாயகர் சதுர்த்திக்கோ, தீபாவளிக்கோ வாழ்த்து சொல்லும் பழக்கம் இல்லை... ஏன் என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்த  நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், “ சர்ச்சையும் அதன் உள்நோக்கமும் புரிகிறது. என் அம்மா வைத்து வழிபட்டது. கரையும்முன் மகள் விருப்பத்தின்பேரில் அவர் கைகளில் புகைப்படமானது, அவ்வளவே” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#udhayanithi #dmk #vinayagar statue
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story