இராணுவ வீரர்களை குறிவைத்து ரூ.1200 கோடி மோசடி; பணத்தை இழந்தவர்கள் கண்ணீர் புகார்.!
இராணுவ வீரர்களை குறிவைத்து ரூ.1200 கோடி மோசடி; பணத்தை இழந்தவர்கள் கண்ணீர் புகார்.!
ஈரோடு மாவட்டத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த யூனிக் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், இலங்கைக்கு வெங்காய ஏற்றுமதி செய்து வந்தது.
இந்நிறுவனம் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை குறிவைத்து, அவர்களின் சேமிப்பு தொகைகளை தங்களிடம் முதலீடு செய்தால் நல்ல வருமானம் கொடுப்பதாக நம்பிக்கை அளித்துள்ளது.
இதனையடுத்து, இவர்களின் நம்பிக்கை வாக்குறுதியை நம்பிய பலரும் பணம் செலுத்தியுள்ளனர். மொத்தமாக ரூ.1200 கோடி பணம் கிடைத்தது, நம்பிக்கை வாசகம் மோசடியான விபரம் நடந்துள்ளது. பணத்தை இழந்தவர்கள் பணம் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் கண்ணீருடன் பரிதவித்து வருகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மீது கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரூ.1 இலட்சம் செலுத்தினால் ஆண்டுக்கு இரண்டு தவணை ரூ.9 ஆயிரம், ரூ.25 இலட்சம் செலுத்தினால் வருடத்திற்கு 4 தவணையாக, 5 ஆண்டுக்கு மொத்தமாக ரூ.83 இலட்சம் வழங்கப்படும் என ஆசைவார்த்தை காண்பித்து மோசடி வலை விரிக்கப்பட்டு இருக்கிறது.