நாளை வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை; இந்திய வானிலை மையம் அறிவிப்பு!!
vadakelakku rain in start tomorrow
இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது என்று இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாளை தான் பருவமழை தொடங்கும் வாய்ப்பிருப்பதாக இன்று மீண்டும் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை இந்தியா முழுவதும் நல்ல மழை பொழிவை தந்தது. கடந்த மூன்று மாதங்களாக பெய்து வந்த தென் மேற்கு பருவமழை நிறைவடைந்து தற்போது தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழையின் மூலம் ஏற்படும் கனமழையை எதிர்கொள்ள வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறியுள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் இந்த புயல் அதி தீவிரமான புயலாக மாறும் என்றும் அடுத்த 5 நாட்களுக்கு கன மழையை தந்து, ஓமனை நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் தென் கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒடிசா நோக்கி நகரும் என்றும் வானிலை மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் அனேக இடங்களில் கனமான மழை பெய்யக்கூடும். மேலும் அக்டோபர் 12ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.