கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் தத்தளித்து வருபவர்களுக்கு வைரமுத்துவின் நிதியுதவி!. தொகை எவ்வளவு தெரியுமா?
vairamuthu gave a money for strome relief fund

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்து, விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்து தவித்துவருகின்றனர்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
இதனையடுத்து அவர் கூறுகையில், எழுதிப் பிழைக்கும் இந்த எளிய கவிஞன், தமிழர் மறுசீரமைப்புக்காக 5 லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வங்கிவழி அனுப்பியிருக்கிறேன். இந்த சிறுதொகை, ஐந்து ஜோடிக் கண்களின் கண்ணீரைத் துடைத்தால் அதுபோதும் எனக்கு என கூறியுள்ளார்.