காதலர் தினமா கொண்டாடுறீங்க.... கையில் தாலியுடன் காத்திருந்த இந்துத்துவா அமைப்பினர்.! தலைதெறிக்க ஓடிய காதல் ஜோடிகள்.!
காதலர் தினமா கொண்டாடுறீங்க.... கையில் தாலியுடன் காத்திருந்த இந்துத்துவா அமைப்பினர்.! தலைதெறிக்க ஓடிய காதல் ஜோடிகள்.!
காதலர் தினமான நேற்று உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் தங்களது அன்பினை பலவிதமாக வெளிப்படுத்தினர். காதலர் தினம் என்றாலே ஒவ்வொரு வருடமும் எதிர்ப்பு கிளம்புவதும் வழக்கம். நேற்று காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதற்க்கு அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால், காதல் என்ற பெயரில் பெரும்பாலும் இளம் பெண்களிடம் அத்துமீறல் மற்றும் பாலியல் வன்கொடுமை நடப்பதாக கூறுகின்றனர்.
காதலர் தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் திருச்சி மலைக்கோட்டையில் ஏராளமான காதல் ஜோடிகள் வருவது வழக்கம். இந்தநிலையில், காதலர் தினம் என்ற பெயரில், கோவிலுக்கு வந்து கலாச்சாரச் சீரழிவில் ஈடுபடுவதை கண்டித்து நேற்று மலைக்கோட்டை கோவிலில் இந்துத்துவா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், கோவிலுக்கு வரும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க கையில் தாலியுடன் போராட்டமும் நடத்தப்பட்டது. இதன் காரணமாக திருச்சி மலைக்கோட்டை கோயிலில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கையில் தாலியுடன் காத்திருந்த போராட்டக்காரர்களை பார்த்து சில காதல் ஜோடிகள் திரும்பிச்சென்றனர்.